சங்கரத்தையில் அடிதடி: மீண்டும் தெருச்சண்டையில் இறங்கிய வட்டுக்கோட்டை பெடியன் – வெளியானது திடுக்கிடும் உண்மை!

கடந்த தீபத்திருநாளன்று வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் ஏற்பட்ட தெருச்சண்டைக்கு காரணம் சங்கரத்தையில் முன்னொரு காலத்தில் பேபியன் குழுவின் அடிவருடி பெடியன் ஒருவர் மூர்க்கத்தனமான மதுபோதையே காரணம் என தற்போது வட்டுக்கோட்டை மக்களால் பரவலாக பேசப்படுகின்றது.

கார்த்திகை விளக்கீட்டு தினத்தன்று ஒவ்வொரு வருடமும் துணவி பகுதியை சேர்ந்த நடேசன் தரப்பினர் சங்கரத்தை குளப் பகுதியில் பெரிய அளவில் விளக்கேற்றி கொண்டாடுவது வழமை.

அந்தவகையில் இவ்வருடமும் அத்தகைய ஏற்பாட்டை துணவி இளைஞர்கள்  மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதியால் வருகைதந்த பேபியன் குழுவின் அடிவருடி பெடியனும் அவரது நண்பன் ஒருவரும் விளக்கேற்றிக்கொண்டிருந்த நடேசன் தரப்பினருடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிறு தகராறு இருதரப்பினரிடையேயும் கைகலப்பாகியது.

இதனை அடுத்து பேபியன் குழுவின் அடிவருடி பெடியன்  உடனடியாக தமது சங்கரத்தை இளைஞர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டித்தனத்திற்கு தயாராக வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

பேபியன் குழுவின் அடிவருடி பெடியனின் அழைப்பை அடுத்து சங்கரத்தை பகுதி இளைஞர்கள் வாள் கத்தி பொல்லுகளுடன் குறித்த இடத்திற்கு திரண்டுள்ளனர்.

இந்நிலையில் துணவி இளைஞர் தரப்பினர் தமது பகுதி இளைஞர்களுக்கு தகவலை அறிவித்துள்ளனர். இதனால் துணவி தரப்பு இளைஞர்களும் அணியாக திரண்டு குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வருகை தந்த துணவி இளைஞர் தரப்பை தாக்கிய தபேபியன் குழுவின் அடிவருடி பெடியன்  தரப்பினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனால் எற்பட்ட கைகலப்பின் போது இருதரப்பிலும் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இதில் பேபியன் குழுவின் அடிவருடி பெடியன் தரப்பைச் சேர்ந்த தனுசன். கஜன், குருவி என பலர் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2004 – 2007 ஆம் ஆண்டுவரை தெருச்சண்டித்தனம் நடத்தி வட்டுக்கோட்டை மக்களை அச்சுறுத்தி தமது வாழ்க்கையை ஓட்டிவந்த பேபியன் என்னும் சிவபாலனுடன் தெருத் தெருவாக சுற்றி சண்டித்தனம் காட்டிய பெடியன், பேபியன் மரணத்தின் பின்னர் ஓடி ஒளிந்துவிட்டு தற்போது மீண்டும் வட்டுக்கோட்டை  சண்டியனாக முயற்சிக்கின்றார் என மக்கள் கூறுகின்றனர்.

இதைவிட மேலாக குருவி என்ற நபர் தான் ஒரு சண்டியன் என்று இளம் பெண்களுக்கு காட்டிக்கொள்ள தற்போது முயன்று வருவதால் அதற்காக பல தெருச்சண்டித்தனங்களுக்கு வலிந்து சென்று கீரோவாக காட்சியளிக்க முற்பட்டு வருகின்றார்.

இதன் விளைவே குறித்த சம்பவம் என்றும் இதனால்பேபியன் குழுவின் அடிவருடி பெடியன் தான் இழந்த மவுசை மீண்டும் பெற முயற்சிப்பதாலும் வட்டுக்கோட்டையில் மீண்டும் சண்டித்தனங்கள் அதிகரிக்கப் போவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டுகளில் சமூக ரீதியில் ஏற்பட்ட மோதல் நடேசன் தரப்பினரது வாள்வெட்டுடன் முடிவுக்கு வந்தது. அதுவும் அதுவரை நாள் தான் ஒரு சண்டியனாக காட்டி கொடுத்து வலம்வந்த பேபியன், நடேசனும் அவனது சகோதரர்கள் சிலரும் சங்கரத்தை பகுதியில் அதுவும் பேபியனின் கோட்டையாக விளங்கிய சங்கரத்தை சந்தியில் வந்து வாள்களுடன் இறங்க தலைதெறிக்க தனது தரப்பினரை கைவிட்டு ஓடி ஒளிந்துகொண்டார் பேபியன்.

இதனால் கூடப்பிறந்த குற்றத்திற்காக பேபியனின் சகோதரன் வாசு உள்ளிட்ட பலர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தனர். அந்த வாள்வெட்டுடன் நிறைவுக்கு வந்தது பேபியனின் சண்டித்தனம்.

அதன் பின்னர் பேபியன் கொல்லப்பட்டார். இதனால் சங்கரத்தை சண்டியர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். பலர் வெளிநாடுகளுக்கும் ஓடி மறைந்தனர்.

பின்னர் யுத்தம் நிறைவுக்கு வந்து நாட்டில் இயல்பு நிலை தோன்றிய பின்னர் மீண்டும் ஒன்றொன்றாக சங்கரத்தை இளைஞர்கள் மீண்டும் வருகை தந்தனர் தமது இடங்களுக்கு. இந்நிலையில் மீண்டும் தாம் ஒரு அடுக்குமுறையாளர்கள் என காட்டிக் கொள்ள மீண்டும் சண்டித்தனத்தை கையிலெடுத்து ரவுடித்தனம் காட்டுகின்றனர்.

இவை இவ்வாறிருக்க மறுபடியும் சண்டித்தனத்தில் நடேசன் தரப்பினரிடம் தோல்விகண்ட சங்கரத்தை தெருச் சண்டியர்கள் தமது தோல்வியை மறைக்க ஈ.பி.டி.பியை கையிலெடுத்துள்ளனர்.

அதாவது தம்மை ஈ.பி.டி.பி தரப்பினர் தாக்கியதாக செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகளை பரப்புகின்றனர். இவற்றை கச்சிதமாக தமக்கு சாதகமாக்கி கொண்ட சைக்கிள் தரப்பினர் தம்மை ஈ.பிடி.பி தாக்கியதாகவும் போதாக்குறைக்கு அமைச்சர் டக்ளஸையும் பொலிஸார் தரப்பினரை கொண்டு குறித்த பிரச்சினைக்குள் இழுத்து செய்தி வெளியிட்டுள்ளனர் என மக்கள் கூறுகின்றனர்.

நடந்த சம்பவம் இளைஞர்களுக்கிடையேயான மோதலை ஈ.பி.டி.பி தரப்பு பிரதேச சபை உறுப்பினரது பெயரை பயன்படுத்தி அவரே தாக்கினார் என்று பொய்யான தகவலை வட்டுக்கோட்டை சாராய பார் மற்றும் கள்ளுக்கடைக்கு அருகில்  கடை  ஒன்றை நடத்திவந்தவரின் தயவில் வாழ்ந்த  ஒருவர் தன் முன்னைய வாழ் நாள் காலத்தை மறந்து இப்ப தனது முகநூலில் ஈ.பி.டி.பியை வசைபாடி செய்தி வெளியிட்டுள்ளார் என்கின்றனர் பிரதேச வாசிகள்.

நடந்த தனிப்பட்ட சம்பவத்தை தமது பகுதியினரின் தோல்வியை மூடிமறைக்க சைக்கிள் கட்சி தரப்பினருடன் இணைந்து மக்களை தவறாக மீண்டும் தூண்டிவிட இவர் போன்றவர்கள் முயல்கின்றனர்.

ஆக தமது தோல்வியை மறைக்க பேபியன் குழுவின் அடிவருடி பெடியன் தரப்பினர் எடுத்துள்ள ஆயுதமே அரசியல் மோதல் என்ற சாயம் என பரவலாக பேசப்படுகின்றது. இதுவே உண்மையும் கூட.

(இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளரால் எமக்கு அனுப்பப்பட்டு எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் எமது செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.)

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்