பொதுத் தேர்தல் உறுதியானது – தேர்தல் திணைக்களம் நடவடிக்கை!

ஜனாதிபதியால் சர்ச்சைக்குரிய முறையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதன் சாதக பாதக நிலைகள் தொடர்பில் நீதிமன்றம்வரை சென்றுள்ள நிலையில் இலங்கை தேர்தல் திணைக்களம் தேர்தல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு தேர்தல் கடமைகள் தொடர்பான அரச அதிகார்களை உள்வாங்குவது தொடர்பில் நடவடிக்கைககளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அதற்கான விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைத்துள்ளதால் மிக விரைவில் இலங்கையில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது அதிகாரத்தைக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அரசைக் கலைத்து மகிந்தராஜபக்‌ஷவை பிரதமராகக் கொண்ட புதிய அரசாங்கத்தை உருவாக்கியதை அடுத்து இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகள் காணப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான தரப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் பெருங்குழப்ப நிலைமைகளை உருவாக்கியதை அடுத்து சர்ச்சைக்குரிய முறையில் ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கொண்டு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இதையடுத்து புதிய தேர்தலுக்கான திகதியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தென்னிலங்கையின் அரசியலில் பெரும் நெருக்கடிநிலை ஏற்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் பிரகாரம் தீர்ப்பு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த விடயத்தை ஆராய்வதற்காக 7 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தேர்தல் திணைக்களம் தற்போது தேர்தல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக அரச அதிகாரிகளுக்கு தேர்தல் கடமைகளில் கலந்து கொள்ளும் அலுவலர் கணக்கெடுப்பு பத்திரங்களை அனுப்பிவைத்துள்ளது.

ஜனாதிபதியின் முடிவு தவறானது என ஒரு பகுதியினராலும் சரியானது என இன்னொரு பகுதியினராலும் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் 7 நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தில் 4 நீதிபதிகள் எடுக்கும் தீர்மானமே இறுதியானதாக அமையும். அந்தவகையில் தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது ஜனாதிபதி முடிவின்படி  விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றே நம்பப்படுகிறது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்