பாராளுமன்றம் கலைப்பு விவகாரம் தொடர்பில் விசாரணை!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான 7 பேர் கொண்ட பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகியோர் குறித்த விவகாரம் தொடர்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்