யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த கொடுத்த நபருக்கு 4ஆயிரம் ரூபாய் சாவகச்சேரி நீதிவான் தண்டம் விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில்’ மேலும் தெரிய வருவதாவது சாவக்கசேரி காவல்துறையினரினால் , சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனத்தை செலுத்த வாகனத்தை வழங்கினார் என குற்றம் சாட்டி வாகன உரிமையாளருக்கு எதிராக நேற்று முன்தினம் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , தன் மீதான குற்றசாட்டை வாகன உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து 4ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிவான், கடுமையாக எச்சரித்து அவரை விடுவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்