இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதபாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பப்பட்டுள்ளது.

2500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தமிழகத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ; 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், அனைத்துப் பயணிகளிடமும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர சோதனை நடத்திய பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, அரசு அலுவலகங்கள், ஆன்மிக தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாடகை வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, நகரின் முக்கிய சாலைகளிலும் தீவிர ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 15 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கை தீவிரப்பட்டுள்ளதுடன், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலும் அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகரில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தைச் சுற்றிலும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது. கோவை, வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் பிரதான நுழைவுவாயில், பின்புற நுழைவுவாயில்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியுடன் ரயில்வே போலீஸார் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுக் கூடங்கள் அனைத்திலும் காவல் துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

சாலையில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் நடவடிக்கைகள் தெரியவந்தால் பொதுமக்கள் அது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் காவற்துறையினர் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்