வவுனியாவில் மகனை காணவில்லை என தேடிய தாய் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார். இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.

பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்