சொர்க்கத்தில் இருக்கும் தந்தைக்கு கடிதம் எழுதிய மகன்

லண்டனை சேர்ந்த தெரி காப்லாண்ட் என்பவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெஸ் என்ற ஏழு வயது மகன் உள்ளார். இந்நிலையில், அந்த சிறுவன் தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அத்துடன் இல்லாமல். சொர்கத்தில் இருக்கும் எனது தந்தையிடம் இந்த கடிதத்தை கொண்டு சேர்த்து விடுங்கள் என்று அந்த சிறுவன் தபால் நிலையத்தில் அந்த கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அந்த கடிதம் அந்த சிறுவனின் தந்தைக்கு பத்திரமாக அனுப்பப்பட்டு விட்டதாக தபால் துறை சார்பாக ஒரு கடித்தத்தை அந்த சிறுவனின் வீட்டிற்கு தபால் துறையினர் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுவனின் தாய் தெரி காப்லாண்ட் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘சில வாரங்களுக்கு முன்பு எனது மகன் இந்த கடிதத்தை அனுப்பினான். அதற்கு தற்போது அழகான ரிப்ளை வந்துள்ளது. தான் அனுப்பிய கடிதம் தந்தையிடம் சென்றுவிட்டது என்பதை அறிந்த பிறகு அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி குறித்து என்னால் விளக்க முடியில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பதிவுடன் அவர் அந்த கடிதங்களின் புகைப்படத்தையும் இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்