நாடு திரும்பினர் பொது நலவாய கராத்தே சாம்பியன்ஷிப் இலங்கைக் குழுவினர்

ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கைக்குழுவினர் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர்.

ஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப், தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் 20 நாடுகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

கனடா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பொட்ஸ்வானா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் அதில் உள்ளடங்குகின்றன.

இலங்கையிலிருந்து 18 வீரர்களும் 3 வீராங்கனைகளும் போட்டியிட்டுள்ளனர்.

இவர்களுள் அரோஷ் சமரவிக்ரம மற்றும் ரமித் வீரசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்