பேருந்து கட்டண சீர்திருத்தம் தொடர்பில் மகிழ்ச்சிச்செய்தி!

பேருந்து கட்டணகளை குறைப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்ற எடுக்கப்பட்டுள்ளதபாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ள போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேருந்து கட்டணங்களுக்கான திருத்தங்களின் சதவீதம் எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் பேருந்து கட்டணங்களையும் குறைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்