வெளிநாட்டில் வாழும் 222 இலங்கை பிரஜைகள் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 222 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளத.
இவர்களில் 52 பெண்கள் உள்ளடங்குவதாகவும் 145 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளதுடன், பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீதி விபத்துக்களில் 21 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 25 ஆண்களும் ஆறு பெண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கை பணியாளர்களே அதிகமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஏழு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் அவ்வறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்