பாகிஸ்தானில் புகையிலை பொருட்களுக்கு 10 வீத கூடுதல் வரி

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் பாவ வரியை 10 சதவீதம் அதிகமாக விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அன்நாட்டு சுகாதார சேவைகள் துறை அமைச்சர் மெஹ்மூத் கியானி தெரிவிக்கையில் கூடுதலாக வசூலிக்கப்படும் இந்த வரித் தொகை சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகளும், நோய்களும் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே பாகிஸ்தானில் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாகிஸ்தானிய அரசு மேலும் தெரிவிக்கையில் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 பேர் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். சராசரியாக ஒரு நாளில் 298 பேரின் உயிரிழப்புக்கு புகையிலைப் பொருள்கள் காரணமாக உள்ளன. மேலும் நாட்டில் நாள்தோறும் புதிதாக 1,500 இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகள் இப்போது புகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் பாவத்துக்கான வரி வேகமாக அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானிலும் சிகரெட் மீது விதிக்கப்படும் பாவ வரி 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் சுகாதாரத் துறையில் செலவிடப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்