பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி – இடைக்காலத் தடை நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்கள் மீதான நான்காம் நாள் விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதம நீதியரசர் நலீன் பெரேரா தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்