யாழ் மாநகரில் கூட்டமைப்பிடம் சரணாகதியடைந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி:  காரணம் என்ன? வெளியானது அதிர்ச்சித் தகவல்!

முதல்வருக்கான ஆடம்பர வாகனம் வேண்டாம் என்றும் முத்திரை வரி நிதியை கையாளும் முறை தவறென்றும் அதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் ஊழியருக்கான கடனை கணிசமாக குறைக்கும் படியும் பிடிவாதம் பிடித்து சபையில் சூடான விவாதம் செய்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முதல்வர் ஆர்னோல்ட் கொடுத்த மதிய நேர தேநீர் விருந்துபசாரத்துடன் முதல்வரது காலில் சரணாகதியான சம்பவம் ஒன்று யாழ் மாநகரசபையில் இன்றையதினம் நடைபெற்றது.

கடந்த 7 ஆம் திகதி யாழ் மாநகரின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு சபையில் தோற்றுப்போன பின்னர் பல மாற்றங்களுடன் இன்றையதினம் மீண்டும் சபையில் முதல்வர் ஆர்னோல்டால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது ஈ.பி.டி.பி தரப்பினர் குறித்த பாதீடு மக்களின் நலன்களை முன்னிறுத்தாது தனிப்பட்ட ஆடம்பரங்களுக்கானதாகவும் படு பாதாளத்தில் தனது வியாபார நிலைமைகளில் காணப்படும் ஒரு நிதிநிறுவனம் போல மாநகர சபையின் பாதீடு உள்ளதாகவும் தெரிவித்து மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏதும் பாதீட்டில் உள்வாங்கப்படாமையால் அதை நிராகரிப்பதாக தெரிவித்திருந்தது.

தொடர்ந்தும் சபையில் தமது விவாதங்களை முன்வைத்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமது கடும்போக்கு தேசியவாத நிலையில் இருந்தவாறு பாதீட்டை எதிர்த்து கடுமையான விவாதங்களை முன்னிறுத்தியிருந்தனர்.

ஆனாலும் விவாதத்தின் போது மக்கள் நலன்களை முன்னிறுத்தி விவாதித்த அவர்கள் தேநீர் இடைவேளையின் பின்னர் முல்வர் ஆர்னோல்ட்டிடம் சரணாகதியாகிவிட்டனர். இதற்கு காரணம் கஜேந்திரகுமாருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையே திடீரென இன்று ஏற்பட்ட இணக்கப்பாடே என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

ரணிலின் ஆட்சி அதிகாரம் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து மக்களை தொடர்ந்தும் வறுமை நிலையில் வைத்திருந்து தமது கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று முன்னணியினர் விரும்பியதுடன் தமக்கு நெருக்கமான கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடமும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில் மத்தியில் ரணிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடாக இருந்தது. இதற்கு ஆதரவாக கூட்டமைப்பு தற்போது செயற்படுவதால் யாழ் மாநகரின் பாதீட்டை அது தோற்கடிக்க விரும்பவில்லை.

இதனால் முதல்வர் ஆர்னோல்ட் முன்வைத்த மக்கள் விரோத பாதீட்டுக்கும் அதன் அமுலாக்க செயற்பாடுகளுக்கும் தலைஆட்டி பாதீட்டை ஏற்றது கஜேந்திரகுமார் தரப்பு.

யாழ் மாநகரின் ஊழியர்களுக்கு கடனாக வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்றும், கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியை எவ்வாறு பாதீட்டில் இணைக்க முடியும் என்றும் ஒற்றைக்காலில் நின்று குறைத்து தொழிலாளர்களது வயிற்றில் அடித்தனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.

அதுமட்டுமல்லாது வறிய மக்களுக்கு வழங்கும் குடிநீருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான கட்டண உயர்வையும் ஏற்று அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஆனால் தேவையற்ற விதத்தில் ஆடம்பர தேவைகளுக்காக குறிப்பாக முதல்வருக்கான ஆடம்பர வாகனத்திற்காக ஒதுக்கிய 30 மில்லியன் நிதியையோ அன்றி தொலைபேசி மற்றும் வாடகை வாகனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையோ குறைத்து வட்டாரங்களின் அபிவிருத்திக்கு அந்த நிதியை முழுமையாக பயன்படுத்த அழுத்தம் கொடுக்க அவர்கள் விரும்பவில்லை.

இது ஒருபுறம் இருக்க தமிழ் மக்கள் பேரவையிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரது இருப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில் தங்களை எப்படியும் பாதுகாக்கவேண்டும் என நினைத்த கஜேந்திரகுமார் தரப்பினரக்கு இச்சந்தர்ப்பம் தேவையாக அமைந்தது.

இதனால் மக்கள் எப்படி இருந்தால் என்ன நாம் எல்லாம் பெற்றால் சரி என்று சிந்திக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வலையில் தமிழ் தேசியம் பேசி மக்களை முட்டாள்களாக்கி வந்த தமிழ் தேசியக் மக்கள் முன்னணியினர் மண்டியிட்டுள்ளனர் என அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகின்றது.

சாதாரண பிரதேச சபைகளே நூற்றுக்கும் மேற்பட்ட கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் தத்தமது பிரதேசத்தின் பாதீடுகளை சமர்ப்பித்திருக்கும் நிலையில் சபையின் நிரந்தர வருமானத்தை கொண்டு தயாரிக்கப்பட்டதும் மேலதிக வருமானங்களை தேடும் முயற்சிகளையோ அன்றி அதற்கான வாய்ப்புக்களையோ உள்வாங்கும் வழிமுறைகளையோ கண்டறியாது வட மாகாணத்தின் ஒரே ஒரு மாநகரசபையான யாழ் மாநகரின் பாதீடு ஒரு விளையாட்டுக் கழகத்தின் ஆண்டு வரவு செலவு அறிக்கை போன்று நீற்றுப்போன ஒரு பாதீடாக அமைந்திருந்தது.

இத்தகைய மக்களை ஏமாற்றும் ஒரு கபடமான பாதீட்டை ஏற்று கூட்டமைப்பினருக்கு இன்று  குடைபிடித்துள்ளது தமிழ் தேசியக் மக்கள் முன்னணி.

ஆக, மக்கள் எவ்வாறு இருந்தாலும் தமது கட்சியின் பாதுகாப்பையும் சுயநலன்களையும் தமது அரசியல் வாழ்க்கயையும் மட்டும் கருத்தில் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த பாதீட்டை ஏற்றுள்ளனர் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்