அப்படி கேட்டாரா யாழ் மாநகர சபை உறுப்பினர் தர்சானந்த் : கொந்தளிக்கும் யாழ்ப்பாண மக்கள்!

தன்னை ஒரு தேசிய உணர்வாளனாகவும் சமூகப் பற்றாளனாகவும் காட்டிக்கொண்டு யாழ் மாநகரசபையில் உரத்த தொனியில் கத்தும் தர்சானந்திற்கு டக்ளஸை பற்றி அவதூறு செய்ய தகுதி உண்டா என யாழ்ப்பாண மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் தர்சானந்த் சாதாரண ஓர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அரசியலுக்கு வரக் காரணம் என்ன? அல்லது இவ்வாறு இதர தரப்பு கட்சிகளை வசைபாடுவதற்கு இவருக்கு தகுதி உண்டா எனவும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

ஏனெனில் சுயநலனைத் தவிர நிலையான ஒரு கொள்கையோ, மக்கள் மீது அக்கறையோ அன்றி மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரோ தர்சானந்திற்கு அதிகமாக கிடையாது.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் அவர் ஒரு மாணவனாக படித்தவேளை தன்னை ஒரு புலி ஆதரவாளனாக  தன்னைக் காட்டி பல்வேறு இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தியவர்தான் இந்த தர்சானந்த்.

இவரது இந்த கபடத்தனத்தால் கடந்த காலத்தில் பயங்கரவாத குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைக்குட்பட்டு உயிருக்கு போராடிய இந்த தர்சானந்த் எப்படி தப்பித்து இன்று உயிர் வாழ்கின்றார் என்பது பலருக்கு தெரியாது.

மக்கள் மத்தியில் சமூக விரோதமான பல கேவலமான வேலைகளை செய்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஆதாரத்துடன் மாட்டிய தர்சானந்தை மீட்க அவரது தாயார் பட்டபாட்டை தர்சானந்த் மறந்துவிட்டாரா?

தர்சானந்தின் தாயார் உயிருக்கு போராடிய தனது மகனை மீட்க புலிகளின் தயவுடன் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் ஓடினார் … மகனை மீட்டுத் தாருங்கள் என்று எம்.பி மாரின் காலில் விழுந்து கெஞ்சினார்!… புலிகளுடனும் தனது மகனின் விடுதலை தொடர்பில் கெஞ்சி மன்றாடினார். ஆனால் தர்சானந்தை  தமது ஆதரவாளர் என்றோ அன்றி தமது செயற்பாட்டாளர் என்றோ புலிகள் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தனிப்பட்டவகையிலேயே இவ்வாறான விரோத செயற்பாடுகளை மேற்கொண்டார் என்றும் கூறி விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள மறுத்துவிட்டனர்.

பாவம் அந்தத் தாய்!… பல்கலை மாணவனாக இருந்த தனது மகனை தமது சுயநலன்களுக்காக உசுப்பேற்றி விடுதலை உணர்வாளனாக காண்பித்து இராணுவத்திற்கெதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்க செய்த புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அந்த அப்பாவித் தாயின் மதிகெட்டு போன மகனை மீட்க முடியாது என கைவிட்டு விட்டனர்.

அதுமட்டுமல்ல புலிகளின் வழிகாட்டலில் பல்கலை மாணவர்களை கொண்டு கள்ள வாக்குகள் மூலம் நாடாளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பு எம்.பிகளின் காலில் விழுந்து தனது மகன் தர்சானந்தை மீட்டு தாருங்கள் என்று கதறி அழுத தாயிடம் சொன்னார்களாம் இப்படி பல மாணவர்கள் கைது செய்யப்பட்டால் தான் உலகுக்கு அரசுக்கெதிரான அரசியலையும் அதற்கான பிரசாரத்தையும் நாம் மேற்கொள்ள முடியும் என்று.

அதிர்ந்துபோன தர்சானந்தின் தாய் மண்ணள்ளி கொட்டி தூற்றிச் சொன்னாராம் உங்கள் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருக்க எங்கள்  பிள்ளைகள் தானோடா உங்கள் அரசியலுக்கு சாவது என்று.

அதுமட்டுமல்ல மேலும் ஒன்று சொன்னாராம் நான் எப்படியும் எனது மகனை மீட்டுக் காட்டுகிறேன் பாருங்கள். மக்களுக்கு சேவை செய்யும் ஒருவரை அவரது செயற்பாடுகளை தடுக்க திட்டமிட்டு உங்களைப் போன்ற துரோகிகளால் துரோகி என்று சொல்லும் டக்ளஸிடம் போய் என்மகனை மீட்டுக் காட்டுகின்றேன் என்று சவால் விடுத்துவிட்டு சென்றாராம் என்று அன்று இச்சம்பவத்தை பார்த்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இவ்வாறு தர்சானந்தின் தாய் டக்ளஸின் அலுவலகம் சென்று அவரை சந்திக்க சென்றுள்ளார். டக்ளஸை  கண்டு கையெடுத்து கும்பிட்டபடி என்னவென்று கூறாது அழுது புலம்பியுள்ளார். டக்ளஸின் உதவியாளர்கள் அவரை ஆறுதல் படுத்திய பின்னர் டக்ளஸ் என்ன பிரச்சினை அம்மா என வினவியுள்ளார். அப்போது தர்சானந்தின் தாயார் தனது மகனின் நிலைமை பற்றி எடுத்து சொல்லி அழுது புலம்பியுள்ளார்.

அச்சமின்றி செல்லுங்கள். நான் உங்கள் மகனை மீட்டு தருகின்றேன். என்று அந்த தாய்க்கு வாக்குறுதி கொடுத்தது மட்டுமல்லாது அதை நடைமுறையிலும் செய்து காட்டி தனது தாய்க்கு பல உதவிகளையும் செய்ததை தர்சானந்த் மறந்துவிட்டாரா?

சம்பவம் நடந்து சில நாள்களின் பின்னர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது அரச அமைச்சர்கள் இராணுவ தரப்பினர் என பலர் வருகை தந்திருந்தனர். குறித்த இந்நிகழ்வின் போது தர்சானந்தின் தாயை அந்த மேடைக்கு அழைத்தார் அன்றைய அமைச்சர் டக்ளஸ்.

பலர் முன் தனது மகனின் நிலைமையை எடுத்துரைக்கச் சொன்னார் டக்ளஸ். அதன் பின்னர்  அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் குறித்த தகவலை எடுத்துச் சென்றுள்ளார் டக்ளஸ். டக்ளஸின் கடுமையான முயற்சியின் பயனாக விடுதலை செய்யப்பட்டார் தர்சானந்த்.

தனக்கெதிராகவே திட்டமிட்ட வகையில் அவதூறு வேலைத்திட்டங்களை செய்தார் தர்சானந்த் என்று தெரிந்தும் கூட டக்ளஸ் மனிதநேயத்துடன் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது தர்சானந்தை விடுவிக்க கடும் பாடுபட்டுள்ளார். இந்த நிலையில் தர்சானந்தின் தாயார் டக்ளஸிக்கு எழுதிய ஒரு சோகம் நிறைந்த கடிதமும் எம்மிடம் காண்பிக்கப்பட்டது.

உயிர் மீண்டு வந்த தர்சானந்த் சமூகத்தில் அச்சமின்றி திரிவதற்காக ஒரு தளத்தையும் டக்ளஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். அதுமட்டுமல்லாது தர்சானந்தை பாதுகாக்க டக்ளஸ் அவருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனத்தை வழங்கி அவரை ஒரு அரச உத்தியோகத்தராகவும் ஆக்கியுள்ளார்.

இதன்பின்னர் சமூகத்தில் இவர் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மக்களுடன் முரண்பாடுகள் என பலவற்றை மேற்கொண்டமையால் அந்த பதவியை கைவிட்டு ஆசிரியராக தற்போது கடமையாற்றிவருகின்றார்.

இந்நிலையில் கடந்த யாழ்.மாநகர வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்ற போது பாதீட்டில் தனக்கு தொலைபேசி வேண்டும் தொலைபேசி வேண்டும் என்று மட்டும் விடாப்பிடியாக நிமிடத்துக்கு ஒருமுறை கோரிக்கை வைத்து தனக்கு தானே முன்மொழிந்து வழிமொழிந்து கொண்டிருந்த தர்சானந்த் ஈ.பி.டி.பி தரப்பினர் பாதீட்டை தூக்கி எறிந்தபோது கேட்டார் ஒரு கேள்வி.

அதாவது மறுபடியும் வந்திட்டேன் என்று சொல்லு என்றவர் என்ன கிளிச்சுப் போட்டவர் என்று கேட்டார் ஒரு கேள்வி?. அதைத்தான் எங்களால் பொறுக்க முடியல பாருங்கோ.. டக்ளஸின் காலில் விழுந்து தன்னை காப்பாற்றியது மட்டுமல்லாது அரச உத்தியோகமும் பெற்றுக்கொண்ட தர்சானந்துக்கு இக் கேள்வியை கேட்க வெட்கமில்லையா? அல்லது கடந்த காலங்களிலும் தர்சானந்த் சொன்னது போல் மறுபடியும் வந்த டக்ளஸ் கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படி மக்களுக்கானதாக மாற்றினார் என்பதை மறந்துவிட்டாரா? என்று கேட்க விரும்புகின்றோம்.

செய்நன்றியையே மறந்த தர்சானந்த் புளொட்டின் சித்தண்ணைக்கு குடைபிடிச்சு மாநகர உறுப்புரிமை பெற்றுவிட்டு மக்கள் நலன் என்று சொல்லி இப்ப தனது சுயநல தேவைகளை பெற்றுக்கொள்ள துடிப்பதுடன் பழையதையும் மறந்திட்டார் போல.

அதுசரி எமக்கொரு சந்தேகம், இப்படி கீழ்த்தரமாக நடக்கும் தர்சானந்த் கேடுகெட்ட குடும்பத்தில் பிறந்திருப்பாரோ?

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்