மதில் ஏறிக் குதித்து திருட முயன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் மண்டை பிளந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதி!

பருத்தித்துறை அல்வாய் பகுதியில் நள்ளிரவு வேளை வீடு ஒன்றின் மதில் ஏறி குதித்து திருட முயற்சித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தலை பிளக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றுள்ளதால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –

கடந் 14 ஆம் திகதி நள்ளிரவுவேளை பருத்தித்துறை அல்வாய் பகுதியின் நாவலடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுள் அதே இடத்ததை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக அப்பகுதியில் செயற்பட்டுவரும் நவநீதன் என்பவர் மதிலால் ஏறி குறித்து திருட முயற்சித்துள்ளார்..

இதன்போது குறித்த நபரது நடமாட்டத்தை அவதானித்த அவ்வூர் இளைஞர்கள் வீட்டு மதில் ஏறிக் குதித்து திருட முயன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரை பக்குவமாக கவனித்துள்ளனர்.

இதன் காரணமாக தலையில் படுகாயமடைந்த நவநீதன் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வீட்டில் இருந்த குடும்பப் பெண்ணின் தாலிக்கொடியை அறுக்க முற்பட்டார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான நவநீதன் தமது கட்சியிடம் வேலைவாய்ப்புக்கள் மற்றும் உதவிகளை பெற்றுத் தருமாறு கோரிச் செல்லும் பெண்களை தவறான உறவுக்கு அழைப்பதுடன் அவ்வாறு பல பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அவ்வூர் மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த கூட்டமைப்பின் திருட்டு நவநிதன் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனது கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்