புதிய பிரதமரின் அதிரடித்தீர்மானம்!

நேற்றைய தினம் மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கா அனைவரும் சமமாக வாழும் அரசியல் அமைப்பொன்றை கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை அகற்றுவது குறித்து பல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டை பிளவுபடுத்துவதற்கு விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர், தாய்நாட்டுக்காக தமது ஜனதிபதி தேர்தல் வெற்றியை அர்ப்பணித்ததாகவும், தொடர்ந்தும் தாம் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்