மருத்துவப் பினாமிகளால் கிளிநொச்சியில் திண்டாடும் நோயாளர்கள்: நடவடிக்கை ஏடுக்காதிருக்கும் மருத்துவ சமூகம்!

கிளிநொச்சியில் சில மருத்துவமனைகளை இலக்குவைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத் துறைப் பணியாளர்கள் சிலர் வீழ்ந்துள்ளனர் என்பது குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முழங்காவில் ஆதார மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதில்லை. மருத்துவர் ஒருவர் அந்த நோயாளர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் போது  மக்கள் வேண்டுமென்றே இரண்டு அல்லது மூன்று மருத்துவ நிபுணர்களால் பார்வையிடப்பட்டு இறுதியில் பெருந்தொகைப் பணம் அறவிடப்பட்டுத்தான் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்திலுள்ள அந்தத் தனியார் மருத்துவமனைகளில் கிளிநொச்சி மருத்துவமனையை மருத்துவர்கள் சிலரும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து அனுப்பப்படும் நோயாளர்களைக் கட்டணம் அறவிட்டு பார்வையிட்டு வருகின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த வியாபாரத்தில் இணைந்து செயற்படும் அனைத்து மருத்துவர்களும் மக்களது வரிப்பணத்தில் கல்வி கற்று மக்களுக்காக சேவையாற்றுவதாகக் கடமைச் சபதம் எடுத்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் பொதுமக்கள் தற்போது மேற்கண்டவாறு பணத்துக்காக விலை போகும் மருத்துவர்கள் பற்றி விசனம் தெரிவித்தனர்.

பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகளுக்கும் அத்தகையவர்களுக்கு எதிராக ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கையில் இறங்குவது குறித்துப் பிரதேச பொதுமக்கள் சில அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர் என்றும் தெரியவருகிறது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்