நோயாளர்களை துன்புறுத்துகிறது அச்சுவேலி ஆதார வைத்தியசாலை – மக்கள் குற்றச்சாட்டு!

நோயாளிகளை கண்டுகொள்ளாது தமது சுயநலன்களுடன் செயற்படும் வைத்திய ஊழியர்களைக் கொண்ட அச்சுவேலி ஆதார வைத்தியசாலையை ஏன் நவீன கட்டடங்கள் அமைத்து  தரமுயர்த்தவேண்டும் என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குறிப்பாக அச்சுவேலி பிரதேசத்தின் அதி தேவைகளுள் ஒன்றான வைத்திய தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒரு முக்கிய தளமாக காணப்படுவது இந்த ஆதார வைத்தியசாலை.

ஆனால் அங்குள்ள வைத்திய அதிகாரிகள்முதல் சாதாரண சிற்றூழியர்கள்வரை தமது பொழுது போக்கு இடமாகவே இந்த வைத்தியசாலையை பயன்படுத்திவருவதுடன்  அதிகார துஷ்பிரயோகங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் நாளாந்தம் அவ் வைத்தியசாலைக்கு செல்லும் பல நூறு நோயாளர்கள் தமக்கு ஏற்பட்ட நோயின் வலியை விட இந்த வைத்தியசாலை நிர்வாகத்தினரின் தொல்லைகளால் ஏற்படும் வலிகளை அதிகம் சுமக்க நேரிடுவதாக கவலை வெளியிட்டுவருகின்றனர்.

நாளாந்தம் இந்த அச்சுவேலி தள வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுள் பலவகைப்பட்டவர்கள் உள்ளடங்குகின்றனர் இதில் சாதாரண காயங்கள் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் மற்றும் காச்சல் உள்ளிட்ட பல நோய்களை சுமந்தவாறு நோயாளர்கள் சென்று தமது நோய்க்கான நிவாரணியை பெற முயல்கின்றனர்.

ஆனால் கடவுளாக பார்க்கப்பட வேண்டிய வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தொலைபேசியில் தம் நெருக்கமானவர்களுடன் கொஞ்சிக் குலாவுவதும் தொலைபேசியில் கேம் விளையாடுவதுமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது கடுமையான வேலை செய்துவிட்டு ஓய்வெடுப்பவர்கள் போல நோயாளிகளை கண்டும் காணாமல் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதுமாக தமது 8 மணிநேரத்தை முடிக்கின்றனர்.

அதன்பின்னர் தமது மேலதிக நேர உழைப்பிற்காக வேலை செய்வதாக காட்டி அதையும் தமது சுயநலன்களுக்காக பயன்படுத்துகின்றனர். அத்துடன் இந்த வைத்தியசாலையின் ஒரு சில வைத்தியர்கள் மனநோய் பாதித்தவர்களாகவும் காணப்படுவதுடன் ஊழியர்கள் பலர் தாம் வைத்தியர்கள் என்ற போர்வையிலும் செயற்படுவதை பார்க்க முடிகின்றது.

அத்துடன் காலையில் நோயாளர்களை வைத்தியர் பார்வையிட்டு மருந்து எழுதிக் கொடுத்தால் மருந்து எடுக்கும் இடத்தில் மருந்தாளர் இருப்பதில்லை.

அதைவிட கொடுமை காயங்களுக்கு மருந்து கட்ட நோயாளர்களுக்கு மருத்துவர் சிட்டை எழுதிக் கொடுத்தால் மருந்து கட்டும் ஊழியர் அங்கு இருப்பதில்லை. ஏன் என்று கேட்டால் அவர் மருத்துவருடன் சென்றுவிட்டார் என பதில் சொல்லப்படுகின்றது.

மருந்து கட்ட நோயாளர் வந்து அவரது மருந்து கட்டும் அறையின் முன்பாக காலை 11 மணிவரை காத்திருக்க வேண்டிய நிலை இந்த வைத்தியசாலையில் நாளாந்தம் காணப்படுகின்றது. இது போலத்தான் மருந்தாளரின் செயற்பாடும்.

அந்தவகையில் இந்த வைத்தியசாலை மக்களுக்கு பயன்படாது இருப்பதால் ஏன் நவீன கட்டடங்கள் அமைத்து  தரமுயர்த்தவேண்டும்?  மக்களின் வரிப்பணத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்? நோயாளர்களுக்கு பயன்படாத இந்த வைத்தியசாலையை மூடிவிட்டு ஏதாவது மக்கள் நலன்சார் திட்டங்களை இங்கு ஏற்படுத்தலாம் என அப்பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே அரச வேலைக்கு வர பலர் துடியாய் துடிப்பது வேலை கிடைத்தபின்னர் ஓய்வு பெற்றவர்களாக செயற்படுவதற்காகவே என சில தினங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அச்சவேலி வைத்தியசாலை நிர்வாகத்தினரே இது உங்களின் கவனத்திற்கு.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்