உன்னை நம்பி நான் நடுத்தெருவில் நிக்கிறேன் – கதிரையை பறிகொடுத்த சம்பந்தன் கடும் மதுபோதையில் சுமந்திரனை திட்டினாராம்?

எனது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என நீ எனக்கு சொன்னதன் அடிப்படையில்தான் நீ சொன்ன எல்லாத்துக்கும் நான் தலையாட்டினேன். ஆனால் இன்று  உன்னை நம்பி நான் நடுத்தெருவில் நிற்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் கதிரையை பறிகொடுத்த சம்பந்தன் அதிக மதுபோதையில் சுமந்திரனை திட்டித் தீர்த்த சம்பவம் ஒன்று நடைபெற்றதாக நம்பகரமான செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் அரசை மீண்டும் கொண்டுவந்தால் தாம் நினைத்தவற்றை எல்லாம் செய்து முடிக்கலாம் என்று கங்கணம் கட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கனவை பிரதமர் ரணிலின் அரசே எதிர்கட்சி தலைவர் என்ற பதவிநிலையிலிருந்து சம்பந்தனை அகற்றியதனூடாக தகர்த்துவிட்டது.

தான் பிரதமரானால் என்றும் சம்பந்தன்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் செய்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை தூக்கி எறிந்து ரணிலுக்காக நீதிமன்றம் வரை சென்ற அவரை பதவியில் அமர்த்தியவர்கள் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

இந்த முடிவை சுமந்திரன் எடுத்தபோது தமிழ் புத்திஜீவிகள் மட்டுமல்லாது கூட்டமைப்பின் விசுவாசிகளே இது தவறான முடிவு இதை மேற்கொள்ளாதீர்கள். அப்படி செய்வதாயின் எழுத்து மூல வாக்குறுதிகளை பெற்று செய்யுங்கள் என தத்தமது கருத்துக்களை நாளாந்தம் வெளியிட்டனர்.

இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத சுமந்திரனும் சம்பந்தனும் தமது தலைவர் ரணிலின் பதவி காப்பாற்றப்பட்டால் மட்டும் போதும்  அதனூடாக தமது சுயநலன்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என கூறி அவரது பதவியை காப்பாற்றினர்.

இதன்காரணமாக ரணில் மீண்டும் பிரதமரானார். புதிய அமைச்சரவையையும் அவரது தலைமையில் உருவானது. இதன்போது ரணிலின் கட்சியை சேர்ந்த சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சி தலைவராக இனி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் என அறிவித்தார்.

இதனால் அதிர்ந்துபோன சுமந்திரன் நாடாளுமன்றில் தனது வித்தைகளை எடுத்துவிட்டார். ஆனாலும் ஒன்றும் சபாநாயகரிடம் எடுபடவில்லை. இதனால் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சி ஆசனத்தில் யாரும் அமராது வெறுமையாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் சபை கூடியபோது யார் அந்த ஆசனத்தில் அமர்வது என்ற கேள்வி எழுந்தது. இதனால் சபைக்கு வந்துகொண்டிருந்த சம்பந்தன் திடீரென தனது கார் சாரதிக்கு வாகனத்தை சற்று ஓரமாக நிறுத்தச் சொல்லியுள்ளார். பின்னர் தொலைபேசியில் நாடாளுமன்றில் உள்ள தமது சகாக்களுக்கு தொடர்பை எடுத்து எனது கதிரை விடயம் என்னவாயிற்று என கேட்டுள்ளார்.

இதற்கு சுமந்திரன் சொல்லியுள்ளார் அவங்க உங்களை அந்த கதிரையில் இருந்து அகற்றிப்போட்டாங்க. நீங்க மனம் தளராது சபைக்கு வந்து சாதாரண உறுப்பினர்கள் அமரும் கதிரையில் அமருங்கள். கதிரை போனால் என்ன? எமக்கு வரவேண்டிய எல்லாம் வந்திட்டுது தானே என்று கூறியுள்ளார்.

இதனால் சபை முடிந்து இல்லம் திரும்பிய சம்பந்தன் வழமைக்கு மாறாக அதிக மது பாவித்து தனது உள்ளக் குமுறல்களை சொல்லி புலம்பியதுடன் உன்னை நம்பி நான் நடுத்தெருவில் நிக்கிறேன் என கதிரையை பறிகொடுத்த கவலையில் சுமந்திரனை திட்டினாராம் என அவருக்கு நெருக்கமானவர்களினூடாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்