திருட்டு பெண்டாட்டியை வடக்கில் கூட்டித்திரியும் சுமந்திரன்: வெட்கத்தில் கூட்டமைப்பு!

கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு வடக்கின் அபிவிருத்தி அமைச்சைப் பெற்றுக்கொடுத்ததனூடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு  ரணில் என்னும் வடக்கின் அபிவிருத்தி அமைச்சை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொடுத்துள்ளனர் என தெரிகின்றது.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் நீதிமன்ற உத்தரவுகளால் மஹிந்தவின் ஆட்சி நிறைவுக்கு வந்தபின்னர் மீண்டும் ரணிலை எப்படியாவது பிரதமராக்க வேண்டும் என நீதிமன்றம் வரை சென்று ரணிலைப் பிரதமராக்கினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.

இதர தரப்பினர் எதை செய்தாலும் அதை தடுத்துவருவதுடன் வடக்கின் அனைத்து செயற்பாடுகளும் தமது ஆளுகைக்குள் இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

அந்தவகையில் தமது எண்ணப்படியே வடக்கின் அபிவிருத்தி இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் திரைமறைவில் அதிகாரங்களை செய்வதற்கு வடக்கின் அபிவிருத்தி என்னும் மக்களின் உணர்வுமிக்க அமைச்சை தமது தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு வழங்க முன்மொழிந்து அதை நிறைவேற்றியுள்ளனர்.

வடக்கின் அபிவிருத்தி என்பது வடக்கை மையமாக கொண்ட ஒன்று. அதன் அதிகாரம் வடக்கை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவதுதான் அந்த அமைச்சின் பெயருக்கு அர்த்தம் கொடுக்கும்.

ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமர் முழு நாட்டின் அபிவிருத்தியை மையமாக கொள்ளாது ஒரு மாகாணத்தின் அமைச்சை மையப்படுத்தி அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருப்பதானது வேடிக்கையாக உள்ளது.

அத்துடன் மக்கள் மீது அக்கறையுடன் உள்ளவர்கள் என தம்மை கூறித்திரியும் கூட்டமைப்பினர்  திரை மறைவில் இருந்து  தமிழ் மக்களின்  அபிலாசைகளை தடுத்து தமக்கேற்ற வகையில் நிகழ்ச்சி திட்டங்களை செய்துவருகின்றனர்.

அத்துடன் வடக்கின் அபிவிருத்தியை அங்கு வாழும், மக்கள் மீது அக்கறையுடன் செயலாற்றுபவர்கள் பெற்றுவிடக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் ஒருதடவை உறுதிசெய்துள்ளனர்.

வடபகுதியில் இருந்து பல உறுப்பினர்கள் அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளில் இருந்து நாடாளுமன்றம் சென்றுள்ளனர்.

இவர்களில் நீண்ட கால ஆயுத போராட்ட அனுபவத்தையும் பல தசாப்த ஜனநாயக அரசியல் அனுபவத்தையும் கொண்ட மாவை, டக்ளஸ், சித்தார்த்தன் போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருக்கின்றனர். அதைவிட குறித்த அமைச்சை இரு தசாப்தம் நடத்திய அனுபவம் வாய்ந்த டக்ளஸ் இருக்கின்றார்.

இவர்களை எல்லாம் தட்டிக்களித்து ரணிலுக்கு முண்டு கொடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணிலை தமது புதிய மனைவியாக அபிவிருத்தி அமைச்சினூடாக திருட்டுக் கலியாணம் செய்துள்ளனர். இதனூடாக வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்ற திருட்டு மனைவியின் அதிகாரத்தை சுமந்திரன் தனதாக்கி கொண்டுள்ளார்.  இதனடிப்படையில் தனது திருட்டு மனைவியையும் வடக்கில் கைப்பிடித்து கூட்டித்திரிய ஆரம்பித்துள்ளார் சுமந்திரன்.

ரணில் – சுமந்திரன் என்னும் இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து குடும்பம் நடத்தினால் எப்படி இருக்கும் குடும்ப வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படித்தான் இன்று வடக்கின் மக்களின் நிலையும் காணப்படுகின்றது.

வடக்கின் அதிகாரம் தம்மிடம் இருக்க வேண்டும் என்றாலோ அன்றி தமது அதிகாரம் தமிழ் மக்களிடமிருந்து அகற்றப்பட கூடாதென்றாலோ ரணிலுடன் இரகசிய உடன்படிக்கை செய்வதை விட்டு தாமே நேரடியாக அந்த அமைச்சை ஏற்று மக்களுக்கு சேவை செய்திருக்கலாம் அல்லவா. ஏன் அவ்வாறு செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவில்லை?

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தமிழர் தாயகத்திற்கான கிளைக் கட்சி என்று வெளிப்படையாகவே தமிழ் மக்களுக்கு தெரியும். இந்நிலையில் எதிர்க் கட்சி என்ற பதவியில் இருந்தவர்கள் ஏன் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று மக்களுக்கு செய்ய முன்வரவில்லை என்பதே கேள்வி.

இதனால் தான் வடக்கு மக்கள் சொல்கிறார்கள் திருட்டுதனமாக கலியாணம் செய்த மனைவி ரணிலை தனது உல்லாசத்துக்காக கலியாணம் செய்துள்ள சுமந்திரன் அந்த மனைவியை தேனிலவுக்காக வடக்கின் பற்றைகள் நிறைந்த பகுதிகளுக்கு பகிரங்கமாக கொண்டு சென்று வருகின்றார் என்று. இவரது செயற்பாட்டை பார்த்து கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்கள் வெளியில் செல்ல வெட்கப்படுகின்றனர் என்று பரவலாக பேசப்படுகின்றது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்