சிறுமியை சித்திர வதை செய்து கொலை செய்த ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் கைது

குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜேர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ஜேர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் ‘கொத்தடிமையாக’ கொண்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங்கிலியால் கட்டி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் ஜெனிபர் எடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியின் முனிச் நகரத்திலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இதுகுறித்த விசாரணையில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்