2019 இல் இடம் பெறவுள்ள முக்கிய பிரகடனம்!

எதிர்வரும் ஆண்டில் தான் ஒரு முக்கியமான பிரகடனத்தை செய்யவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறைகூவல் ஒன்றினை விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஆண்டில் ஊழல் அற்ற ஒரு நாட்டை கடியெழுப்புவதற்கே இந்த அறைகூவல் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் கண்டி தலாதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட போN அதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்தை மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததாகவும் மேற்படி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதன்போது தேரரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு பிறக்கும் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது.

அஸ்கிரி மகாநாயக்க தேரர் வெளிநாடு சென்றிருப்பதால் அஸ்கிரி கெடிகே மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து உரையாடினார். இதன்போதும் தேரர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியை ஆசீர்வதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்