இன்று முதல் ஸ்மாட் அடையாள அட்டை விநியோகம்

ஸ்மார்ட் ஆள் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின்; பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவிக்கையில் மேல் மாகாணத்தினை மையப்படுத்தி ஸ்மார்ட் ஆள் அடையாள அட்டை தயாரிக்கும் நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாகவும் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட புகைப்படப் படப்பிடிப்பு நிலையங்களில் மாத்திரம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வியானி குணதிலக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்