ஊருக்கு உபதேசம் உனக்கில்லையோ கஜேந்திரகுமாரா? – யாழ்ப்பாணத்து மக்கள் கேள்வி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இனவாத தமிழ் தேசியம் பேசும் குழுக்களை ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய முன்னணி என்று சொல்லப்படும் கூட்டினது தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல கோடி ரூபா பெறுமதியில் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் மிகப்பெரும் ஆடம்பர மாளிகை ஒன்றை கட்டியிருக்கின்றார். அந்த செயற்பாடானது ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்றமாதிரி உள்ளதாக யாழ்ப்பாணத்து மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

முற்றுமுழுதாக தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தவரைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த பங்களா தற்போது முழுமையாக நிறைவுக்கு வந்துள்ளது.

இதன் பாதுகாப்புக்காக வடக்கில் அபலைப் பெண்களை தனது இம்சைகளுக்கு உள்ளாக்கிவருபவரும் பொலிசாரிடம் நான் யார் தெரியுமா? எனக் கேட்டு புலம்பித் திரியும் அப்புக்காத்து பெடியன் ஒருவரை கஜேந்திரகுமார் குடியமர்த்தியுள்ளார் என தெரியவருகின்றது.

கஜேந்திரகுமாரின் பாட்டன் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தனது சுயலாபங்களுக்காக கப்பல் அமைச்சராக இருந்து அதில் பெருந்தொகை மோசடி செய்து தனது வங்கிக்கணக்கை நிரப்பியவர்.

அதுமட்டுமல்லாது மலையக தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்வுக்கு துணைபோனவர். அதாவது மலையக மக்களுக்கு வாக்குரிமை கொடுக்க அன்றைய அரசு வாக்கெடுப்புக்கு விட்டிருந்த நேரத்தில் மலையக மக்களுக்கு இனரீதியாக வடக்கத்தையான்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது என பகிரங்கமாக கூறி அந்த மக்களின் வாக்குரிமைக்கு எதிராக வாக்களித்து மலையக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்த தமிழின துரோகியாவார்.

கஜேந்திரகுமாரின் தந்தையார் குமார் பொன்னம்பலம் யுத்த காலத்தில் தன்னிடம் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு வரும் பெண்களிடம் ஒரு நாளுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பாலியல் இலஞ்சம் பெற்றுவந்தமையாலேயே புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் என அவரது மரணத்தின் பின்னரான விசாரணைகளில் தெரியவந்தது. ஆனாலும் தாம் செய்த கொலையை மறைக்க புலிகள் பாலியல் குற்றவாளி குமாருக்கு மாமனிதர் பட்டத்தையும் வழங்கினர்.

இன்று நாட்டில் அமைதி நிலை உருவாகியுள்ள நிலையில் மறுபடியும் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டுவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி மேடைகளிலும் ஊடகங்களிலும் சொல்லும் வசனங்கள் ஏராளம்.

அதில் ஒன்று முக்கியமாக தென்னிலங்கை சிங்களவர்களுக்கு வடக்கில் எக்காரணம் கொண்டும் தொழில் வாய்ப்புக்கள் வழங்க கூடாது அவர்களை எமது பிரதேசங்களில் கால் எடுத்து வைக்க இடம் கொடுக்கக் கூடாது என்று.

ஆனால் அதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆடம்பர மாளிகையை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் அமைப்பதற்காக தென்னிலங்கை சிங்கள தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டிவருவதை பார்க்க முடிகின்றது.

மக்களை ஏமாற்றி போலி வீர வசனங்களை மேடைகளில் முழங்கிவரும் இந்த போலிக் கூட்டம் தமிழ் மக்களை தொடர்ந்தும் முட்டாள்களாக்கியே வருகின்றனர் என்பதை இதனூடாக பார்க்க முடிகின்றது.

அந்தவகையில் ஊருக்கு உபதேசம் தனக்கில்லை கண்ணே என்ற மாதிரித்தான் இந்த செயற்பாடு காணப்படுகின்றது. அதனால்தான் யாழ்ப்பாணத்து மக்கள் கேட்கிறார்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் கஜேந்திரகுமாரா உனக்கு மட்டும் இல்லையோ என்று.

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்