இலங்கையின் காட்டுப்பகுதியில் ஒன்று கூடிய வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள்

இலங்கையின் பிரபல சுற்றுலாத்தளம் அமைந்துள்ள காட்டுப்பகுதியான உஸ்ஸன்கொடவில் பெருமளவு வெளிநாட்டவர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இங்கு 3000 வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் சுற்றுலா முகாம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது.

சுமார் 70 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாம் இலங்கையில் நடைபெறும் 7வது சந்தர்ப்பம் இதுவாகும்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்கானிப்பின் கீழ் அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளின் ஆதரவுடன் சுற்றாடலுக்கு நெருக்கமான சுற்றுலா வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களுக்கு பாரிய பொருளாதார நன்மைகள் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூர் நடனம், நாடகம், வெளிநாட்டு பொப் இசை குழுக்கள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்