நேற்று முதலாவாது வடமாகாண சபை கீதம் இயற்றிய கலைஞர்கள் கௌரவிப்பு!

முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாகாண சபையின் பேரவைச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பேரவைத் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில்இடம் பெற்றுள்ளது.

குறித்த விழாவில் மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பத்திநாதன், முன்னாள் பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் , முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்