பால் ஊற்றி அபிஷேகம் செய்த அஜித் கட்அவுட் முறிந்து விழுந்ததில் ஐவர் படு காயம்

நேற்று திருக்கோவிலூரில் விஸ்வாசம் ரிலீசை முன்னிட்டு அஜித்தின் பிரம்மாண்ட கட்அவுட்க்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்றினர். பலர் கட்அவுட் மீது ஏறி பால் ஊற்றியதால், எடை தாங்காமல் கட்அவுட் அடியோடு சரிந்து விழுந்ததில் 5 பேருக்கு படு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருக்கோவிலூரில் விஸ்வாசம் ரிலீசை முன்னிட்டு அஜித்தின் பிரம்மாண்ட கட்அவுட்க்கு அவரது ரசிகர்கள் பால் ஊற்றினர். பலர் கட்அவுட் மீது ஏறி பால் ஊற்றியதால், எடை தாங்காமல் கட்அவுட் அடியோடு சரிந்து வீழ்ந்துள்ளது.

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

குடும்பக் கதையை மையப்படுத்திய இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு சில திரையரங்களில் அதிகாலை 1 மணிக்கு படம் திரையிடப்பட்டுள்ள இன்னிலையில் குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்