சிறந்த அஞ்சல் அலுவலகம் ஆக சாவகச்சேரி அஞ்சல் அலுவலகம் தெரிவு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி அஞ்சல் அலுவலகம் தேசிய நிலையில் சிறப்பு விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பொது நிர்வாக அமைச்சின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் கடந்த 2016 2017 ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

சாவகச்சேரி அஞ்சல் அலுவலகம் கடந்த 2016 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த அஞ்சல் சேவை நிலையமாக அஞ்சல் திணைக்களத்தினால் தேசிய நிலை மற்றும் மாகாண நிலைகளில் முதலிடம் பெற்றது.

அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சலர் செ.செந்தூரன் தேசிய நிலையில் சிறந்த சேமிப்பு ஊக்குவிப்பாளர் போட்டியில் முதலிடத்தைப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்