184 கிலோ கஞ்சாவுடன் கைதானார் ஒருவர்

மன்னார் – வங்காலை கடற்பகுதியில் வைத்து 1 கோடியே 84 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாவைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கஞ்சாப் பொதிகளும் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்