பேசாலை வைத்தியசாலை ஊளியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிச் சாரதி மீது, கடமை நேரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளமை தொடர்பில் பேசாலை வைத்தியசாலை ஊழியர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை தீவிர சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அம்புலன்ஸ் வண்டியானது அங்கு நோயாளர்களை அனுமதித்துவிட்டு இரவு 10 மணியளவில் மீண்டும் பேசாலை நோக்கி வந்துள்ளது.

மன்னார் தலைமன்னார் பிரதான பாதை மன்னாருக்கும் தாராபுரத்துக்கும் இடையிலிருந்து ஒரு முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்து பேசாலை சவுக்காலைக்கு அருகாமையில் அம்புலன்னஸ் வண்டியை இடைமறித்துள்ளனர்.

பேசாலை வைத்தியசாலையிலிருந்து இன்னொரு நோயாளியை எடுத்துச்
செல்ல வேண்டியிருந்ததால் அம்புலன்ஸ் வண்டியை நிறுத்தாது பேசாலை
வைத்தியசாலையை நோக்கிச் செலுத்தியுள்ளார் சாரதி.

 

ஆனால் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்கள் கொண்ட குழுவினர்
வண்டியைப் பின்தொடர்ந்து பேசாலை வைத்தியசாலைக்கு முன்பாக மறித்து சாரதி மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை ஊழியர் மற்றும் அருகில் இருந்த பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து தாக்குதலை நடாத்திய நபர்களைக் கைது செய்துள்ளனர்.

அம்புலன்ஸ் வண்டிச் சாரதி வாகனத்தை செலுத்திக் கொண்டு வருகையில், எதிரே வந்தமுச்சக்கர வண்டிக்கு வெளிச்சம் போடாமல் வந்ததே தாக்குதல் மேற்கொண்டமைக்குக் காரணம் என்று ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது.

பேசாலைப் பொலிஸார் தாக்குதல் நடாத்திய மூவரையும், முச்சக்கர வண்டியையும்மற்றும் தாக்குதலுக்கு பாவித்த தடயப் பொருளையும் நீதிமன்றில் பாரப்படுத்தவுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அம்புலன்ஸ் வண்டி சாரதி எஸ்.வேந்தக்கோன் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பேசாலை பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்