மன்னாரில் இன்று வீதி ஓட்டப்போட்டி

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வன்மைப் போட்டியின் முதல் நிகழ்வாக வீதி ஓட்டப்போட்டி(மரதன்) இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் வீதி ஓட்டப்போட்டியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான போட்டி பிரதான வீதியூடாகச் சென்று மன்னார் வைத்தியசாலை வீதியைச் சென்றடைந்தது.

-அதனைத் தொடர்ந்து மன்னார் பள்ளிடுனை வீதியூடாகச் சென்று மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்து மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.

போட்டியில் 1 ஆம் இடத்தை எம்.எம்.எம்.முஜாகிர் மற்றும் 2 ஆம்,3 ஆம் இடங்களை எம்.எல்.எம்.சல்மான் பாரீஸ் மற்றும் எம்.கே.எம்.வசீம் ஆகியோர் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்