யாழில் மாணவர்கள் செய்த மோசமான வேலை!

யாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
நல்லிணக்கபுரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பளையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்கு சென்றுள்ளனர். நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும், மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும், மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் இவர்கள் கிடந்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தகாதவார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழு வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தாம் பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாணவரொருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள அந்த மருந்தகங்களுக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி குழு அங்கு பரிசோதனை மேற்கொண்டு அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்