பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று (11) முதல் முகவர் புத்தக நிலையங்களில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்