35 ஓட்டங்களால் இலங்கை அணியினை வெற்றி கொளண்டுள்ள நியூசிலாந்து அணி!

நியூசிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் டக் பிரேஸ்வெல் 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், கசுன் ராஜித்த மூன்று விக்கட்டுக்களையும், அணித்தலைவர் லசித் மாலிங்க 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

அதன்படி, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் திசர பெரேரா 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் லொக்கி பெர்குசன் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளார்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்