பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் – சிற்றூழியர் தொடர்பு அம்பலம்:  தவிசாளரால் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறாரா மதினி நெல்சன்?

சமூக ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் தனது மக்களது ஆதரவுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று பருத்தித்துறை நகரசபையின் உப தவிசாளரான திருமதி மதினி நெல்சனின் அரசியல் வளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக அச்சபையின் தவிசாளர் இருதயராஜ் திட்டமிட்ட வகையில் அவதூறுகளை சுமத்தி தனக்கான சுயநல அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தி வருவதால் சமூக ரீதியில் தாழ்ந்த மக்களை இது இழிவுபடுத்தும் செயலாக அமைந்துள்ளதாக பருத்தித்துறை மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரணைமடு குளத்தின் பொறியியல் பிரிவினரால் அல்லது நிர்வாகத்தினரால் தவறுகள் விடப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக பருத்தித்துறை நகரசபையால் பொதுமக்கள், வர்த்தகர்கள், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், சுவிஸ் ஒன்றியம் என்பவற்றின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி இரவு பொதி செய்யப்பட்டன.

இந்நிலையில் சேகரிக்கப்பட்ட பொருட்களில் ஒருசில பொருட்கள் உபதலைவரின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வெளியாகியது.

நகரசபை உபதலைவர் மதனி நெல்சன், மற்றும் இன்னுமொரு பெண் உறுப்பினரும் இணைந்து உபதலைவரின் அறையில் பொதி செய்துள்ளனர். ஏனையவர்களும் சபையின் மற்றைய இடங்களில் இருந்து பொதி செய்துள்ளனர்.

பெண் உறுப்பினர்கள் குறிப்பிட்ட நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் குறித்த மதினி உள்ளிட்ட சிலர் வீடு சென்ற நிலையில், சேகரிக்கப்பட்ட பொருட்களின் ஒரு பகுதி காணவில்லையென கூறப்பட்டது.

இதையடுத்து நகரசபை செயலாளர் உள்ளிட்டவர்கள் அங்கு தேடுதல் நடத்தி உபதவிசாளர் மதனி நெல்சனின் அறை அலுமாரியில் பால்மா பைக்கற்றுகள் சிலவும், படுக்கை விரிப்பு உள்ளிட்ட சில பொருட்களை எடுத்ததாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனாலும் மறுநாள், பாதிக்கப்பட்ட இடங்களிற்கு சேகரிக்கப்பட்ட அனைத்து நிவாரணப்பொருட்களும் அனுப்பி வழங்கப்பட்டன.

இது தொடர்பில் சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக கடும் வாதப்பிரதிவாதங்களுடன் சபையில் கூட்டம் நடந்தது. உப தலைவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய எதிர்க்கட்சிகள், அவரை பதவியிலிருந்து விலக வலியுறுத்தின.

எனினும், அந்த பொருட்கள் தனது அலுமாரிக்குள் எப்படி வந்தது என்று தெரியாதென மதனி நெல்சன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அந்த விவகாரத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றும் அவர் மறுத்தார்.

இதனிடையே குறித்த பொதியிடலின் போது சபையின் உறுப்பினர்கள் தமக்கு நெருக்கமானவர்களையும் அழைத்துவந்து பொதியிட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடித்ததாக தெரிவிக்கும் தவிசாளர் தரப்பினர் குறித்த சம்பவத்தை உப தவிசாளரது கவனத்திற்கு கொண்டு செல்லாததுடன் மதினியைக் குறிவைத்து அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் தனக்கு வேண்டிய தொழில் நுட்ப உத்தியோகத்தர் மற்றும் செயலாளர், உறுப்பினர் தயாபரன் ஆகியோரை கொண்டு உபதவிசாளர் மதினிக்கு அறிவிக்காது அலுமாரியை உடைத்து குறித்த பொருட்களை எடுத்ததாக கூறுகின்றனர்.

உண்மையில் அவ்வாறு ஒரு சம்பவம் நடந்திருந்தால் ஏன் உப தவிசாளரை உடன் அவ் இடத்திற்கு தவிசாளர் அழைக்கவில்லை? அவர் முன்னிலையில் ஏன் அவரது அலுமாரியை உடைக்கவில்லை? அவ்வாறு அவரது அலுமாரிக்குள் பொருட்கள் இருந்த தகவல் தெரிந்திருந்தால் ஏன் மதினிக்கு அதை உடைப்பதற்கு முன்னர் தெரிவிக்கவில்லை? என்ற சந்தேகங்கள் இந்த குற்றச்சாட்டு மதினி மீது திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்கின்றன.

ஆகவே மதினியை இலக்குவைத்து திட்டமிட்டே இந்த அவதூறு குற்றச்சாட்டு தவிசாளரால் நகர்த்தப்பட்டுள்ளது என்பது இதனூடாக புலனாகின்றது.

அதைவிட முக்கியமானதொன்று  மதினியை குற்றவாளியாக கூறும்படி தவிசாளர் தரப்பினர் அவருடன் இருந்து பொதியிட்ட பெண் உறுப்பினர்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றனர். ஆனாலும் அவருடன் இருந்த பெண் உறுப்பினர் அவ்வாறானதொரு சம்பவத்தை மதினி செய்வதற்கான வாய்ப்பில்லை என கூறுகின்றார்.

இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மதினி நெல்சன் 16000 மேற்பட்ட வாக்குகளை பெற்று வடமராட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களது வாக்குகளை கூட்டமைப்பினருக்கு அதிகளவில் பெற்றுக் கொடுத்திருந்தார்.

அந்தவகையில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் மதினியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் மதினியின் வடக்கு மாகாண சபைக்கான உள்நுழைவை எப்படியாவது தடுத்து தன்னுடைய சமூகம் சார்ந்த ஒருவரை அந்த இடத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டுவரும் தவிசாளர் இருதயராஜ் மதினியை எப்படியும் கட்சிக்குள் தவறாக சித்தரித்து அவரை ஓரங்கட்டவேண்டும் என சதித்திட்டங்களை தீட்டி அதற்கான களமாக இதனை பயன்படுத்தியுள்ளார் என பருத்தித்துறை மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொருட்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எந்தவொரு பொருளும் சபையின் வாளாகத்தை விட்டு வெளியேற்றவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை என்று தெரிவிக்கிறது தவிசாளர் தரப்பு. ஆனாலும் மதினிதான் குற்றவாளி என்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு ஆதாரமற்ற வகையில் மதினி மீது குற்றச்சாட்டை முன்வைக்க இன்னொரு காரணமும் உண்டு. அதாவது சபையில் பணியாற்றும் சுகாதார பெண் ஊழியர் ஒருவருடன் பிரதேச சபையின் செயலாளர் தனிப்பட்ட தொடர்பு வைத்துள்ளார் என செய்தி பரவியதால் அதை குறித்த பெண்ணினதும் செயலாளரதும் நலன் கருதி அவர்களை பாதுகாக்க மதினி செயற்பட்ட சில நடவடிக்கைகளால் தான் அந்த தகவல் வெளியானது என கடந்த சில காலமாக மதினி மீது செயலாளர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது தவிசாளர் ஒரு கட்சி நலன் சார்ந்தவர் அல்ல என்றும் தற்புகழ்ச்சிக்காகவே அவர் இந்த கதிரையில் அமர்ந்தள்ளார் எனவும் மதினி கூறிவந்துள்ளார்.

இதனால் சில மாதங்களாக மதினி மீது செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் கடும் கோபத்தில் இருந்தனர் என தெரியவருகின்றது. ஆனாலும் தவிசாளர் ஒரு கையாலாகாதவர் என்ற வகையில் தமது கோபத்தை மதினி மீது தீர்த்துக்கொள்ள முடியாதிருந்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் கைப்பொம்மையாக தவிசாளர் இன்பராஜ் சபையில் செயற்பட்டுவருவதால் தற்போது சைக்கிள் கட்சி தரப்பினர் தமக்கு குறித்த சபையின் ஆட்சி அதிகாரம் கிடைக்காத ஆதங்கத்தை தவிசாளருடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர் என தெரிகின்றது.

ஏனெனில் சாதாரண ஒரு விடயமான இந்த விடயத்தை தனது அதிகாரத்தை கொண்டு கட்டுப்படுத்த முடியாது தவிசாளர் இருக்கின்றார் என்றால் அதன் அர்த்தம் வேறாகத்தான் காணப்படுகின்றது.

தனது கட்சிக்காரர் என்பது மட்டுமல்லாது தனது அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஒரு பெண் உறுப்பினரை சமூகத்தில் குறைந்தவர் என்பதை காரணம் காட்டி அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியாகிய மதினியை இப்படி பழிவாங்குவது ஏன்?

இதிலிருந்துதான் இந்த செய்தி திட்டமிட்ட வகையில் சாதி அடிப்படையில் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்த பெண் வடமராட்சியில் அதிக மக்கள் செல்வாக்கை கொண்டுள்ளார் என்பதால் அந்த வாக்கு பலத்தை கொண்டு நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மதினி வெற்றிபெற்று உறுப்பினரானால் தாழ்ந்த சாதிக்காரி முன்னிலையில் தாங்கள் கைகட்டி வேலை செய்ய விரும்பவில்லை. இதனால்தான் மதினி மீது இத்தகைய அபாண்ட குற்றச்சாட்டை  சுமத்தியுள்ளனர் என தெரிகின்றது. ஆனாலும் கட்சியின் உயர் மட்டம் மதினியை கைவிடாது என சொல்லப்படுகின்றது.

 

 

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்