ஈரானில் சரக்கு விமானம் விழுந்ததில் 10 பேர் பலி

ஈரானில் போயிங் சரக்கு விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து ஈரானுக்கு விமானிகள் உள்ளிட்ட 10 பேர புறப்பட்டு சென்ற போயிங் 707 ரக சரக்கு விமானமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தரையில் விழுந்து நொருங்கியதும் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்