யாழில் இளம் பெண்களுக்கு அச்சுறுத்திய இளைஞன் கைது!

பெண்களின் நகைகளைக் கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் தனிமையில் செல்லும் பெண்களின் தங்க நகைகளைக் கொள்ளையடிததுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதுடன் கொள்ளையடித்து விற்பனை செய்யப்பட்ட நகைகளில் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் சாவகச்சேரி பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்