இலங்கை ரூபாயின் விலை சற்று அதிகரிப்பு!

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதியில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.84 ரூபாயாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய முறி மூலம் 98 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்ட முடிந்ததாகவும் அதன் மூலம் டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த சில காலமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்