கடந்த 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் பலி

கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்கள் காட்டு யானைகள் தாக்கி 95 பேர் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மனித செயற்பாட்டினாலேயே, அதிக யானைகள் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்த யானைகளில் 48 யானைகள், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன.

அத்துடன் 29 யானைகள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை ஆயிரத்து 445 யானைகள் உயிரிழந்துளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்