சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் மன்னார் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிங்கி படகொன்றில் 302 கிலோ கிராம் கடல் அட்டைகள் 12 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளும் டிங்கி படகும் அடுத்த கட்ட விசாரணைகளுக்கான யாழ். சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்