50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பினூடாக 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, மீகொட, பிலியந்தலை மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

தெஹிவளை பகுதியில் 250 கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகொட பிரதேசத்தில் 112 கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 27 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை, மடபாத்த பகுதியில் 33 வயதான நபரொருவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்கள் ராகம பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்